உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுாரில் ரூ.15 கோடியில் தேவாங்கு பாதுகாப்பு மையம்

அய்யலுாரில் ரூ.15 கோடியில் தேவாங்கு பாதுகாப்பு மையம்

திண்டுக்கல் : வடமதுரை அய்யலுாரில் தேவாங்கு இனத்தை பாதுகாக்குவும், வருங்கால சந்ததியினர் இவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ரூ.15 கோடியில் தேவாங்கு பாதுகாப்பு மையம் கட்டுவதற்கான பணி விரைவில் துவங்க உள்ளது.வடமதுரை அய்யலுார் வனப்பகுதிகளில் தேவாங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. இவைகள் மெதுவாக நடக்கும் தன்மை கொண்டவை என்பதால் ரோட்டோரங்களில் செல்லும் போது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் தேவாங்கு இனம் அழியும் நிலை ஏற்பட்டது. இவைகளை காப்பாற்ற தேவாங்கு பாதுகாப்பு மையம் ஏற்படுத்த திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள் அரசுக்கு கோரினர். அரசு ஒப்புதலின் பேரில் அதற்கான இடம் அய்யலுார் பகுதியில் தேர்வு செய்யப்பட்டு ரூ.15 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அதன் வடிவமைப்புகள் அடங்கிய புளுபிரிண்ட் வெளியிடப்பட்டுள்ளது. 8.77 ஹெக்டேரில் அமைக்கப்படும் இம்மையத்திற்கு வரும் பொது மக்கள் பொழுதுபோக்கிற்காக நடை பாதைகள்,உயர் கோபுரங்கள்,கேண்டீன்கள்,கழிப்பறைகள்,காத்திருக்கும் அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கான டெண்டர் ஜூன் 28 ல் நடக்கிறது .ராஜ்குமார்,மாவட்ட வன அலுவலர்,திண்டுக்கல்: தேவாங்கு இனங்களை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வுக்காக வனத்துறை சார்பில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் அழியும் தருவாயில் உள்ள தேவாங்குகளை குழந்தைகள்,வருங்கால சந்ததியினர் எப்படி பாதுகாக்க வேண்டும். ரோடுகளில் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இங்கு வருவோருக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. டெண்டர் முடிந்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை