உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரே புகையிலைப் பொருட்கள் விற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் விளக்கமளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விமலா ஆரோக்கிய மேரி. இவர் திண்டுக்கல் மாநகராட்சி 41வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி சாலையில் இவர் நடத்தி வரும் தேனீர் கடையுடன் கூடிய மளிகை கடையில் தடை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது . ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். சில நாட்களுக்கு பின் கடை செயல்பட துவங்கியது .இந் நிலையில் கவுன்சிலர் விமலா தடை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வீடியோ ஒன்று வைரலானது.உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வம் கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டார். ஆனால் தடை புகையிலை இல்லை என்பதை கண்டார். அங்கு கடை ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் கவுன்சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ