பழநி: எங்கும் நாய் தொல்லை, சாலை வசதி அறவே இல்லை என பல்வேறு பிரச்னைகளுடன் பழநி நகராட்சி 29 வது வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.சிங்கபெருமாள் கோனார் சந்து, பாரதி நகர், ராஜகுருவீதி, சுபதேவ் வீதி, பொன்னகரம்,ஆண்டவர் பூங்கா ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ஆண்டவர் பூங்கா ரோடு பழநி கோயில் விழா காலங்களில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியே வாகனங்கள் அதி வேகத்தில் பயணிப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துரத்துவதால் விபத்து
குமரேசன், தனியார் ஊழியர், சிங்கப்பெருமாள் சந்து, : இப்பகுதியில் ஆண்டவர் பூங்கா ரோட்டில் மழைக்காலங்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. வார்டு முழுவதும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகள் ,பெரியவர்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது. டூவீலர் ஓட்டுநர்களை நாய் துரத்துவதால் விபத்தில் சிக்குகின்றனர் . குழந்தைகளுக்கு சிரமம்
மகேந்திரன், சாலையோர வியாபாரி, சுபதேவ் வீதி : சுபதேவ் வீதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஜிகா முழுமையாக செயல்படவில்லை. பழைய பைப் லைனில் தண்ணீர் வருகிறது. பாரதி நகர் சாலையில் வார்டு மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். தேவை போலீஸ் ரோந்து
நாட்ராயசுவாமி, ஓய்வு மில் தொழிலாளி, சிங்கப்பெருமாள் கோனார் சந்து : எங்கள் பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். சாலைகள் குறுகலாக உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை அகற்றப்பட வேண்டும். சமூக விரோத செயல்களை கண்காணிக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கழிவுநீர் தேக்கத்தை தடுக்க பாலங்கள்
ஆறுமுகம்,கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : வார்டில் தண்ணீர் வசதி சாலை வசதி சரியாக உள்ளது. குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். நாய் தொல்லை குறித்து நகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாக்கடையில் கழிவுநீர் தேங்குவதைகுறைக்க பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தெருவிளக்குகள் எரிகின்றன. கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.