உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் யானை

தாண்டிக்குடியில் யானை

தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் குடியிருப்பு பகுதியில் நடமாடிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நேற்று முன் தினம் இரவு முருகன் கோயில் வனபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 2 காட்டு யானைகள் தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன் மெயின் ரோட்டோரமுள்ள குடியிருப்பை கடந்து விவசாயத் தோட்டங்களில் இருந்தது. அங்கிருந்த அவரை, சவ்சவ், பீன்ஸ் பந்தல்களையும், மலை வாழையையும் சேதப்படுத்தியது. பின் காளியம்மன் கோயில் வழியாக பெருங்கானல் வனப்பகுதியில் முகாமிட்டது. தாண்டிக்குடி வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ