மேலும் செய்திகள்
கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது
02-Sep-2024
கொடைக்கானல் : கொடைக்கானலில் கள்ளச்சாராய ஊறல் அமைத்த இருவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்தவர்கள் தேவசியா 71, டின்ஸ் 42. இருவரும் கொடைக்கானல் வடகவுஞ்சி மேல்பள்ளம் தனியார் தோட்டத்தில் பணி புரிந்த நிலையில் அங்கு கள்ளச் சாராய ஊறல் அமைத்திருந்தனர். சாராய ஊரலை கைப்பற்றி அழித்த கொடைக்கானல் போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் ஒணம் பண்டிகைக்காக கேரளாவிலிருந்து வரும் நபர்களை உபசரிப்பதாக சாராயம் காய்ச்சியதாக தெரிவித்துள்ளனர்.
02-Sep-2024