உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மைக்செட் கோடவுனில் தீ

மைக்செட் கோடவுனில் தீ

நத்தம் : நத்தத்தில் நள்ளிரவில் மைக்செட் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்தது .நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்தவர் நாகராஜன் 49. நத்தம் -மீனாட்சிபுரம் பகுதியில் தகர செட்டில் மைக்செட் கோடவுன் நடத்தி வருகிறார். இங்கு பெரிய வகை ஸ்பீக்கர் பாக்ஸ்கள், சீரியல் செட்டுகள், கட் அவுட்கள், ஒலிபெருக்கி என ஏராளமான பொருட்களை வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பற்றியது. சிறிது நேரத்தில் செட் முழுவதுமாக பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்தது . நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். இது போல் நத்தம் தேரடி தெரு ரகு என்பவரது லோடு வாகனமும் தீப்பிடித்து எரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி