| ADDED : மே 25, 2024 05:04 AM
வேடசந்துார், : கணவரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி உட்பட 3பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பாரிச்சாமி 45. இவர் ,மனைவி பரிமளா 40, 4 குழந்தைகளுடன் வேடசந்துார் புளியமரத்துக்கோட்டை பெரியபட்டி கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த அபுதாபியில் வேலை பார்க்கும் ரமேஷ் க்கும் பரிமளாவுக்கும் 3 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை பாரிச்சாமி கண்டித்துள்ளார். இதை பரிமளா கள்ளக்காதலன் ரமேஷ் இடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனைபடி உறவினரான குமார் 35, என்பவர் மூலம் கூலிபடை மூலம் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்கு தனியார் பஸ் கிளீனர் காளிமுத்து ரூ.1.50 லட்சம் கேட்டுள்ளார்.அதன்படி காளிமுத்து தலைமையில் ஆறு பேர் கொண்ட கும்பல் பெரிய பட்டி கோழிப்பண்ணை வந்து பாரிச்சாமியை கொலை செய்ய முயன்றனர். குழந்தைகள் தடுத்ததால் கடுமையாக தாக்கிய நிலையில் விட்டுச் சென்றனர்.செல்லும் வழியில் தம்மனம்பட்டி லாரி செட்டில் நின்ற டூவீலரையும் திருடி சென்றனர். படுகாயமடைந்த பாரிசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பரிமளா, உறவினர் குமார், 17 வயது சிறுவன் என 3 பேரை கைது செய்தனர்.இதனிடையே போலீசார் திண்டுக்கல் பேகம்பூர் பஸ் ஸ்டாப்பில் நின்ற காளிமுத்து , 17 வயது மூன்று சிறுவர்களை கைது செய்தனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.