உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்

வடமதுரை, : வடமதுரை அருகே ஏலச்சீட்டு நடத்தி வசூலான ரூ.2.50 கோடியுடன் தலைமறைவானவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியான பாதிக்கப்பட்டோர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.வடமதுரை தென்னம்பட்டி தோணிகவுண்டன்புதுாரை சேர்ந்த தர்மராஜ் 54. இப்பகுதியில் தொடர்ச்சியாக 10க்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளை நடத்தினார். துவக்க ஆண்டுகளில் நேர்மையாக குறித்த நேரத்தில் ஏலச்சீட்டு தொகையை பட்டுவாடா செய்ததால், பலரும் நம்பிக்கையுடன் இவரது ஏலச்சீட்டுகளில் சேர்ந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் ரூ.2.50 கோடிக்கு அதிகமான தொகையுடன் தர்மராஜ் தலைமறைவானார். தான் வசித்த வீட்டினை தனது மகளுக்கு பத்திரப்பதிவு செய்துவிட்டு தற்போது சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தர்மராஜின் ஏலச்சீட்டில் சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் கடந்த பிப்.ல் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தந்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தியில் இருந்தவர்கள் நேற்று மதியம் திடீரென வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் சமரசம் செய்யவே மறியல் செய்தோர் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை