கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்க இலவச தடுப்பூசி
திண்டுக்கல்
உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் உள்ளன. இந்திய அளவில் தமிழகத்தில்தான் கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.2016ல் தமிழ்நாடு மாநில புற்றுநோய் பதிவேட்டின்படி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் பெரம்பலுார் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பாதிப்பும் , இந்தியாவில் உள்ள இதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் பெரும்பாலானோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காக ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் குயின்சிட்டி , திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு இதற்கான மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்க இலவச முகாமினை திண்டுக்கல்லில் நடத்தி உள்ளது. பயனுள்ள முகாம்
இளமதி , மாநகராட்சி மேயர், திண்டுக்கல் : இந்த முகாம் ஏழை,எளிய பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும். நோய்க்கான அறிகுறி தெரிந்தால் இது மாதிரியான முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். மக்களுக்கு பயனுள்ள முகாம். மாதம்தோறும் நடத்த திட்டம்
பார்கவி, செயலாளர், குயின்சிட்டி ரோட்டரி கிளப், திண்டுக்கல் : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ம ஆய்வில் 100 ல் 4 பேரே இந்த நோய் குறித்து தெரிந்துள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லை. நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி உள்ளது என்பதை தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். 9 வயது முதல் 14 வயது குழந்தைகளுக்கு 2 டோஸ் வரை போட வேண்டும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.3 ஆயிரம். ஏழை, எளிய மக்களால் அது முடியாது. இதனால் இலவசமாக பரிசோதனை ,தடுப்பூசியினை வழங்குகிறோம். இம்முகாமினை மாதந்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.அனைவருக்கும் தடுப்பூசிகவிதா , தலைவர், குயின்சிட்டி ரோட்டரி கிளப்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக 8 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி உள்ளது. இதனை எழை, எளிய மக்களுக்கு தெரியப்படுத்தி இலவசமாக வழங்க முடிவு செய்து முகாம் நடத்துகிறோம் . நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலே தடுப்பூசி மூலமாக சரி செய்து விடலாம். மத்திய, மாநில அரசுகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாங்களும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். பதிவு செய்தாலே போதும் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.கண்டறிந்தால் தடுத்து விடலாம்டாக்டர் லட்சுமணன், காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி : பெண்களுக்கு பொதுவாக வரக்கூடியது கர்ப்பபை வாய் புற்றுநோய். இந்த முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ள மருத்து பஸ்சில் பரிசோதனை செய்தவதற்கான அதிநவீன கருவிகள் உள்ளன. புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் தேவையான மருத்துவ ஆலோசனை , தடுப்பூசிகள் வழங்குகிறோம். முன்னரே கண்டறிந்தால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். விழிப்புணர்வு இல்லை
சீதாலட்சுமி, பயனாளி, திண்டுக்கல் : இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, தடுப்பூசி முகாம் நடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் விசாரித்தோம். முகாம் நடப்பதை உறுதிப்படுத்திய பின் எங்கள் பகுதி மக்களோடு வந்து இதில் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர். விழிப்புணர்வுக்காக நாங்களும் ஒவ்வொரு பகுதியாக சென்று தெரிவித்து வருகிறோம். பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் புரிய வைத்து பயனடைய வைக்கிறோம் என்றார்.