உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாரில் விநாயகர் சிலைகள் ரெடி

வேடசந்துாரில் விநாயகர் சிலைகள் ரெடி

வேடசந்துார் : வேடசந்துாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் 67 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளான செப்.7ல் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் பொதுமக்களின் தொடர் வழிபாட்டை தொடர்ந்து செப்.11 மாலை வேடசந்துார் அரசு மருத்துவமனை முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி, ஆத்துமேடு, தாலுகா ஆபிஸ் ரோடு வழியாக குடகனாற்றில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆர்.ஹெச். காலனி விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !