மேலும் செய்திகள்
பழநியில் எஸ்.பி., ஆய்வு
01-Sep-2024
பழநி : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இரண்டாம் நாளாக நேற்று பழநியில் சிவசேனா, ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத ஹிந்து மஹாசபா, ஹிந்து தமிழர் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தது. 96 வாகனங்களில் சிலைகளை எடுத்து வந்தனர். பழநி அடிவாரம் இட்டேரி ரோடு, ஆண்டவர் பூங்கா ரோடு சந்திப்பில் துவங்கிய ஊர்வலம் பூங்கா ரோடு, தேவர் சிலை, மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, காந்தி மார்க்கெட் ரோடு, தேற்கு , மேற்கு , வடக்கு ரதவீதிகள், கோவை ரோடு வழியே சண்முக நதியை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டது. ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார், சிவசேனா மாநில தலைவர் மணிபாரதி, இளைஞர் அணி தலைவர் கனிவளவன் கலந்து கொண்டனர். எஸ்.பி.,பிரதீப் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
01-Sep-2024