மேலும் செய்திகள்
பி.பி.ஜி., நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
01-Sep-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா அன்னை தெரசா மகளிர் பல்கலை ,துணைவேந்தர் கலா தலைமையில் நடந்தது. அடைக்கல அன்னை சபை மையக் கல்வி ஒருங்கிணைப்பாளர் மரியம்மாள், மாநில தலைமை பவுலின் பாத்திமா,கல்லுாரி நிர்வாகி பர்த்தலமேயு,கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் அமலிபுஷ்பம் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி செயலர் ஜோசப் செலின் வரவேற்றார். பான் செக்கர்ஸ் கல்வி குழுமத் தலைவர் மரிய பிலோமி பேசினார். தலைமை விருந்தினர் கலா பேசினார். பல்கலை தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கம்,236 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மாணவி இர்பானா பர்வீன் கல்லுாரி அனுபவங்களைப் பகிர்ந்தார்.
01-Sep-2024