மேலும் செய்திகள்
ஏ.வி.பி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
02-Mar-2025
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லுாரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பேரவை நிறைவு விழா, நுண்கலை விழா, 20வது பட்டமளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. முதல்வர் கீதா தலைமை வகித்தார். ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், டி.எஸ்.பி., செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சீனிவாசகன் வரவேற்றார். காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். பல்கலை அளவில் தங்க பதக்கங்களை வென்ற 7 மாணவிகளை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கினார். மராட்டிய மாநில தமிழ் எழுத்தர் பாஸ்கர், துறை தலைவர்கள் லதா, சுமதி, கவிதா மகேஷ்வரி, பாண்டீஸ்வரி, முருகவேல், சுரேஷ்குமார், செந்தில்குமார். உமா மகேஷ்வரி, செல்வம், இக்பால், பேராசிரியர்கள் சின்னச்சாமி, தீலிபன், மாயாண்டி, கார்த்திகேயன், சங்கரக்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொருளாளர் திலகவதி செய்தார். முடிவில் முன்னாள் மாணவியர் சங்கத் செயலர் லட்சுமி நன்றி கூறினார்.
02-Mar-2025