மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
12-Mar-2025
கொடைக்கானல்: வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதலே பனிமூட்டம் நகரை சூழ்ந்து மிதமான மழை பெய்ய இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்றும் இதே சூழல் நிலவியது.கடும் பனி மூட்டத்தால் எதிரே வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.இடைவிடாது பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர். மதியம்12:00 மணிக்கு பின் கனமழை வெளுத்து வாங்கியது . 3 மணி நேரம் பெய்த கன மழையால் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டின. மாலை வரை லேசான சாரல் நீடித்தது. கோடையில் வழக்கத்திற்கு மாறான கனமழையால் மலை நகரம் சில்லிட்டது . மழையால் மலை கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியிலும் மிதமான மழை பெய்தது.
12-Mar-2025