உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்

சின்னாளபட்டி: ''சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதப்பட வேண்டும்''என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நுாலகர் ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேசினார்.காந்திகிராமம் பல்கலையில் தமிழ்த்துறை சார்பில் நடந்த பாரதியார் நினைவு தின கருத்தரங்கில் அவர் பேசியதாவது : இந்திய சுதந்திர போராட்டம் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவு சார்ந்த செயல்பாடாக முன்னெடுக்கும் போது ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை சமூக அரசியல் செயல்பாடுகளாக தமிழகத்தில் வ.உ.சி., பாரதியார் சுப்பிரமணிய சிவா முன்னெடுத்தனர். சுதந்திர போரின் பெரும் பகுதியை பாரதியாரின் பாடல்களும், வ.வெ.சு.,ஐயரின் எழுச்சியும், வ. உ. சி., யின் பேச்சும் சுப்பிரமணிய சிவாவின் ஆவேசமும் கட்டமைத்தன. இதற்கேற்ப இந்திய சுதந்திரத்தின் போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என்றார். துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.பேச்சு ,கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் பரிசு வழங்கினார்.பாரதியார் ஆய்வக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். இந்திய மொழிகளின் புல முதல்வர் முத்தையா, உதவி பேராசிரியர் சிதம்பரம் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ