உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கன்னியாகுமரி- முதல் காஷ்மீர் வரை கர்நாடக இளைஞர் ஆன்மிக பயணம்

கன்னியாகுமரி- முதல் காஷ்மீர் வரை கர்நாடக இளைஞர் ஆன்மிக பயணம்

பழநி : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையாக ஆன்மிக தலங்களை தரிசிக்க செல்லும் கர்நாடகா மாநில இளைஞர் பழநி முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தார்.கர்நாடகா மாநிலம் பெல்காமை சேர்ந்தவர் சந்திப் ரெட்டி 35. தேசியக்கொடியுடன் பாதயாத்திரையாக பழநி முருகன் கோயில் வந்தார். சுவாமி தரிசனம் பின் பொள்ளாச்சி நோக்கி சென்றார். அவர் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையாக ஆன்மிக பயணம் செல்கிறேன். வழியில் செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டும் செல்ல திட்டமிட்டுள்ளேன். மே 16 ல் துவங்கிய பயணம் தொடர்ந்து கன்னியாகுமரி,தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதி கோயில்களில் தரிசனம் முடித்து பழநி கோயிலில் தரிசனம் செய்துள்ளேன்.பணமில்லாமல் காஷ்மீர் வரை உள்ள ஆன்மிக ஸ்தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி