| ADDED : மார் 30, 2024 04:59 AM
கொடைக்கானல், : கொடைக்கானலில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் மேல்மலைக்கு செல்லும் பஸ்கள் டிரிப் கட் செய்வதை கண்டித்து பயணிகள் தனியார் பஸ்சை முற்றுகையிட்டனர்.கொடைக்கானலில் தொடங்கும் சீசன், வார விடுமுறை, தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வருகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது. இத்தருணங்களில் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட தொலைதூர கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு டிரிப் கட் செய்கின்றனர். தொடரும் இச்சம்பவம் குறித்து இப்பகுதியினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஏராளமான பயணிகள் தனியார் பஸ்சுக்காக காத்திருந்தனர். தாமதமாக வந்த பஸ் டிரிப் கட் செய்வதாக கூறவே ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்சை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை செய்து மற்றொரு தனியார் பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர். தொடரும் பிரச்னைக்கு போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.