உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இஸ்ரோ தேர்வு மாணவிக்கு பாராட்டு

இஸ்ரோ தேர்வு மாணவிக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி 12ம் வகுப்பு மாணவி எம்.இறைமலர் கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி நடத்திய தேசிய அளவிலான ஸ்ரீ சக்தி ஆன்லைன் விண்வெளி வினாடி வினா போட்டியில் பங்கேற்றார். முதல் 100 இடங்களில் 28-ம் இடம் பெற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விணவெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆக.15ல் சுதந்திர தினத்தன்று நடக்கும் விண்வெளி ராக்கெட் ஏவுகணை ஏவும் நிகழ்ச்சிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பள்ளி செயலாளர்கள் மங்களராம்,காயத்திரி மங்களராம், முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன், ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா. பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன்,அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ