போக்சோ வழக்கில் இருவருக்கு ஆயுள்
ண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம்,சிறுமியை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிகள் இருவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திண்டுக்கல் புதுப்பட்டி கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மகேந்திரன் 33. இவர் 2022ல் தனது பெற்றோர் அறிவுறுத்தலில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இந்த தகவலை அறிந்த நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மகேந்திரனை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் திண்டுக்கல் நிலக்கோட்டை அணைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி குபேந்திரபாண்டி24. என்பவர் 2021ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து குபேந்திரபாண்டியை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வேல்முருகன்,குற்றவாளிகள் மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை,ரூ.1லட்சம் அபராதமும், குபேந்திரபாண்டிக்கு ஆயுள் தண்டனை,ரூ.1,05,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.