உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சிகளுக்கு வழங்கிய பராமரிப்பு தொகை குறைந்தது; மக்கள் தொகைப்படி வழங்காததால் திணறல்

ஊராட்சிகளுக்கு வழங்கிய பராமரிப்பு தொகை குறைந்தது; மக்கள் தொகைப்படி வழங்காததால் திணறல்

வேடசந்துார், பிப்.23-- -- ஊராட்சிகளுக்கு மக்கள் தொகைப்படி ரூ. லட்சக்கணக்கில் வழங்கி வந்த மாதாந்திர பராமரிப்பு தொகை தற்போது ரூ.10 ஆயிரமாக குறைத்ததால் ஊராட்சி நிர்வாகங்கள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக அந்தந்த ஊராட்சிகளின் மக்கள் தொகை அடிப்படையில் மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து தான் தெரு விளக்கு , குடிநீர் பராமரிப்பு ,மின்மோட்டார் பழுது பார்க்கும் பணிகள்,மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை பார்த்து வருகின்றனர்.பராமரிப்பு நிதியானது முன்பு ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்தனர். ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நிதி முறையாக வழங்கப்பட்டு வந்தது. இதன்பின் பராமரிப்புத் தொகையை குறைத்ததால் இதை கொண்டு எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை என ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். ஒரு ஊராட்சியில் குறைந்தது 6 கிராமங்கள் முதல் 60 கிராமங்கள் வரை உள்ளன. குடிநீர் மோட்டார் பழுதடைந்தால் அதை சரி சய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு மோட்டாரை பராமரிக்கவே இவ்வளவு செலவு என்றால், தெரு விளக்கு ,குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் வேறு உள்ளது.இந்த நிதியை கொண்டுதான் ஊராட்சிகளில் இயற்கை மரணம் அடையும் ஆதி திராவிட மக்களுக்கான ஈமக் கிரிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் . இவ்வாறு ஒரு ஊராட்சியில் ஐந்து முதல் ஏழு காலனிகள் இருக்கும் நிலையில் குறைந்தது இரண்டு மூன்று குடும்பங்களுக்கு ஈம கிரியை நிதி வழங்குவது கூட பாக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர். இதை கருதி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதி குழு மானிய நிதியை முன்பு வழங்கியது போல் முறையாக, கூடுதலாக வழங்க மாநில அரசு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை