உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் மண்டல பூஜை

கோயிலில் மண்டல பூஜை

நத்தம், : -நத்தம் குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இவ்விழாவையொட்டி கோவில் முன்பாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசன பூஜைகளும்,108 சங்காபிஷேகம், முதல், 2ம் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை மஹா பூர்ணாகுதி பூஜையை தொடர்ந்து மூலவருக்கு பால், பழம்,சந்தனம், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. அன்னதானமும் வழங்கபட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைமை நிர்வாகி மணிமாறன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை