உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தாலம்மன் கோயில் விழா

முத்தாலம்மன் கோயில் விழா

நத்தம் : -நத்தம் அருகே எட்டையம்பட்டி, பொய்யாம்பட்டி, நடுவனுார் ஆகிய 3 கிராமங்களில் நடந்த முத்தாலம்மன் கோயில் திருவிழாக்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அந்தந்த கிராமங்களில் வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு வந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை , அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ