உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தென் மண்டல சிறந்த ஸ்டேஷனாக நத்தம் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு

தென் மண்டல சிறந்த ஸ்டேஷனாக நத்தம் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு

நத்தம் : தெற்கு மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஸ்டேஷன்களில் நத்தம் போலீஸ் ஸ்டேஷன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான கேடயங்களை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமிக்கு வழங்கி பாராட்டினார்.தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மாநில, மாவட்டம், மாநகரம் அளவில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது.அதன்படி மாநில அளவிலான சிறந்த 3 போலீஸ் ஸ்டேஷனுக்கு குடியரசு தின கொண்டாட்டத்தின்போது கேடயங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது போல் மண்டல வாரியாகயும் சிறந்த 10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி தெற்கு மண்டலத்தில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களில் நத்தம் போலீஸ் ஸ்டேஷனும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடயத்தை டி.ஜி.பி., சங்கர் ஜூவால் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமிக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை