உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்க மாநகராட்சி கமிஷனரிடம் அலுவலர்கள் புகார்

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்க மாநகராட்சி கமிஷனரிடம் அலுவலர்கள் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டறியவேண்டும் என மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கமிஷனர் ரவிச்சந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடியை கணக்குபிரிவு இளநிலை உதவியாளர் சரவணன் கையாடல் செய்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . போலீசாரும் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் பலருக்கு இதில் தொடர்புள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதனால் பொது மக்களை மாநகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் சந்திக்க முடியவில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மன உளைச்சலாக உள்ளது. உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டறியவேண்டும். மாநகராட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பரவும் செய்திகளை தடுத்த நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை