உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

வேடசந்துார்: திருச்சி மாவட்டம் மணப்பாறை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் பிளமிங் ஜாய் 24. இவரும் இவரது நண்பர் ஒருவரும் வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் டூவீலரில் சென்றனர்.நவாமரத்துப்பட்டி அருகே வந்தபோது எதிர் திசையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்துார் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிளமிங் ஜாய்,மயக்கம் நிலையிலே உள்ளார். அவருடன் வந்த வாலிபர் இறந்தார். வேடசந்துார் போலீசார் அங்குள்ள சி.சி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை