மேலும் செய்திகள்
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
13-Mar-2025
திண்டுக்கல்: காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கு விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட செயலர் கர்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் சேசுராஜ் கலந்து கொண்டனர். நிர்வாகி சாந்தி நன்றி கூறினர்.
13-Mar-2025