| ADDED : ஜூலை 29, 2024 06:29 AM
சேதமான கூரையால் அச்சம்கோபால்பட்டி ராமராஜபுரம் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள் இங்கு வரும் மக்கள் அச்சத்துடனே வருகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புசாமி,கோபால்பட்டி.-----விபத்து ஏற்படுத்தும் தடுப்புச்சுவர்மோளப்பாடியூரிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் ரோட்டில் ஓடைக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - நிர்மல்க்குமார், அய்யலுார்.-----சகதியால் தடுமாறும் வாகன ஓட்டிகள்ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் ரோட்டில் செம்மண்ணை பரப்பி உள்ளனர். இதனால் மழை நேரங்களில் சகதியாக மாறி அவ்வழியில் வரும் டூவீலர்கள் தடுமாறி கீழே விழுகின்றன. மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கி.ரங்கசாமி கம்பளிநாயக்கன்பட்டி.------குண்டும் குழியுமான ரோடுஆத்துார் ஒன்றியம் கலிக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலிருந்து சின்னாளபட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக சேதமாக உள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.மயில்வாகனன், கலிக்கம்பட்டி.-----ஆக்கிரமிப்புகளால் அவதிதொட்டனம்பட்டி ஏ.டி. காலனி ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆக்கிரமித்து சிமென்ட் பூச்சு, கற்கள் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜன் தொட்டனம்பட்டி.-----கழிவுநீரால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியே வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் வெளியேறாமல் டுக்க வேண்டும். முத்துக்குமார், திண்டுக்கல்.----குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல் மாலப்பட்டி - தோட்டனுாத்து ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கரும்புகை பரவி மக்களுக்கு மூச்சித்திணறல் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார், மாலப்பட்டி.---.....................................................