போலீசிடம் செயின் பறிப்பு: இருவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியில் டூவீலரில் சென்ற போலீசை தாக்கி அவரிடமிருந்த 4 பவுன் செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் சதீஷ்குமார்35. நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் நல்லாம்பட்டிக்கு டூவீலரில் சென்றார். வழியில் நின்றபோது 2 பேர் சதீஷ் குமாரை தாக்கி 4 பவுன் செயினை பறித்து சென்றனர். புகார் பெற்ற 2 மணி நேரத்தில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த ராகவேந்திரா 25, அரவிந்த் 21 ஆகிய இருவரையும் கைது செய்து 4 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.