உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்கம்பம் சரிந்தது- உயிர்தப்பிய பணியாளர்கள்

மின்கம்பம் சரிந்தது- உயிர்தப்பிய பணியாளர்கள்

நத்தம் : நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் நெல் அறுவடைப்பணி மேற்கொள்ளும் போது மின் கம்பம் சரிந்து விழுந்ததில் பத்திற்கும் மேற்பட்ட விவசாயப் பெண் பணியாளர்கள் உயிர் தப்பினர்.ஆவிச்சிபட்டியில் முருகேசன் சொந்தமான நிலத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை பத்திற்கு மேற்பட்ட விவசாய பெண் பணியாளர்கள் அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வயலின் நடுவே இருந்த மின்கம்பம் அடிப்பகுதி முறிந்து சாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இவர்கள் தப்பினர். நத்தம் மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று மின் விபத்துக்களை தவிர்க்க சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்