உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி தொழுகை

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மருநுாத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.வரலாறு காணாத கடுமையான வெயிலின் காரணமாக முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ,கால்நடைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நீர்நிலைகளில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதை தொடர்ந்து மழை வேண்டி மருநுாத்து மந்தை குளத்தில் ஜமாத்தார்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். மருநுாத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் ஜமால் முகமது,கனி ,சாதிக் அலி,சேக் இஸ்மாயில்,ஜபருல்லா என இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி