உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்

நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்

வடமதுரை; திண்டுக்கல் நகரை சுற்றி புறச்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பணம் வழங்காமல் பணிகள் துவங்கியதை கண்டித்து விவசாயிகள், பொது மக்கள் விளைந்த நெல் கதிருடன் கருப்புக்கொடியை ஏந்தியபடி ரோடு மறியல் செய்தனர்.திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச் சாலையில் முள்ளிப்பாடி பகுதியில் இருந்து நத்தம் நெடுஞ்சாலையை குறுக்கே திண்டுக்கல் மதுரை நான்கு வழிச் சாலையில் பஞ்சம்பட்டி பகுதி வரை 21 கி.மீ., துாரத்திற்கு புறச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகம் செய்யப்பட்டது. பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் கையகம் செய்யப்பட்ட இடங்களுக்கு எந்தவிதமான பதில் அளிக்காமலும், உரிய இழப்பீடும் வழங்காமலும் பணி துவங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் ஒத்தக்கடை அருகே தங்கள் நிலத்தில் விளைந்த நெல் பயிர், பருத்திச் செடிகளுடன் கருப்பு கொடியேந்தியபடி விவசாயிகள் ,மக்கள் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூற போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !