பூஜாரிகள் பேரமைப்பு கூட்டம்
திண்டுக்கல்: பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில செயலர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணக்குமார், செயலர் சந்தோஷ்குமார், பொருளாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பு செயலர் குமார் வரவேற்றார். கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுத்தி சேலத்தில் நடக்கும் பூஜாரிகள் பேரமைப்பின் மாநில மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். நீர்நிலைகளை துார்வார வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்கள் போல் ஹிந்து கோயில்களுக்கும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்க வேண்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநகர் தலைவர் ஹரியன் நன்றி கூறினார்.