உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் நேற்று சீரான இடைவெளியில் மழை விட்டு விட்டு பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.திண்டுக்கல்லைப் பொறுத்தவரை சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது. கோடைகாலம் நெருங்கியதால் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்த நிலையில், நேற்று காலை முதலே மேகம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதே நேரத்தில் அவ்வப்போது துாரல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. காலை 11 :00மணிக்கு மேல் லேசான மழை பெய்ததது. மதியம் 12 :00மணிக்கு மேல் அரைமணி நேரம் இடைவிடாது பெய்த மழை சீரான இடைவெளியில் அவ்வப்போது பெய்த வண்ணமே இருந்தது. இதனால் வெயிலால் புலம்பிய மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்தனர். இரவு வரை குளிர்ச்சியான நிலையே நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !