உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை மரங்கள் முறிந்து விழுந்தது

திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை மரங்கள் முறிந்து விழுந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து,மின்தடை,போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது.மாவட்டத்தில் ஏப்.,மே மாதங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கும் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. அதே நேரத்தில் மே 4ல் அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28ல் முடிந்தது. இருந்தாலும் இடைப்பட்ட நாட்களில் விடாது மழை பெய்தது. 4 நாட்களுக்கும் மேலாக வெயில் மீண்டும் வாட்டி வதைத்தது. மாலை நேரங்களில் மேக மூட்டம் இருந்தாலும் மழை பெய்யவில்லை.நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தாலும் மதியம் 1:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3:30 மணிக்கு லேசான துாரலுடன் பெய்ய தொடங்கிய மழை கனமழையாக மாறியது. 45 நிமிடங்களுக்கும் மேலாக இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. நகரில் பல்வேறு ரோடுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி ரோடு மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கியது.பழநி: பழநி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை அதிக வெயில் தாக்கம் இருந்தது. மதிய வேளையில் பழநி சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்ததால் நகரம் குளிர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் தண்ணீர் கூடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.எரியோடு: எரியோடு பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. நால் ரோடு பகுதியிலிருந்த உயரமான ஆதி மரம் சாய்ந்து சக்திவிநாயகர் கோயில் மீது விழுந்தது. இத்துடன் இப்பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மின்சப்ளை தந்த 3 மின்கம்பங்களும் சேதமடைந்து முறிந்தது. இதையடுத்து சேதமான பகுதிக்குரிய சப்ளையை மட்டும் துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் இதர குடியிருப்புகளுக்குரிய மின்வினியோகத்தை சீரமைத்து வழங்கினர்.ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகமூட்டம் சூழ்ந்து பலத்த சூறாவளி வீசுகிறது. கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், மைலாப்பூர், அனுமந்தராயன்கோட்டை,கன்னிவாடி, நாயோடை நீர்த்தேக்கம், குட்டத்துப்பட்டி, குய்யவநாயக்கன்பட்டி உள்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. மழைக்கால வேளாண்மை, வசிப்பட, வழித்தட பாதிப்பு தொடர்பாக, கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ