| ADDED : ஜூலை 26, 2024 12:24 AM
திண்டுக்கல் : பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க.,சார்பில் திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் நல்லாம்பட்டி பகுதியில் வன்னியர் சங்க கொடியேற்றப்பட்டு நல்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மேட்டுராஜக்கப்பட்டி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவிலுார் ,முள்ளிப்பாடி பிரிவில் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜான் கென்னடிதலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிற்றரசு,மாநில செயற்குழு உறுப்பினர் சீரங்கன்,அமைப்புச் செயலாளர் சரவணன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்முத்துராஜ்,சமூக ஊடகப் பேரவை தலைவர் கார்த்திக்,மகளிர் அணி மாவட்ட தலைவி சுதா,சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், பகுதி ஒன்றிய செயலாளர்கள் குமார், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், பாஸ்கரன், ராஜேந்திரன்,வேலுமணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், சங்கீத் ஜேம்ஸ் பங்கேற்றனர்.