உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராட்வீலர் நாய்கள் மாநகராட்சி ஆய்வு

ராட்வீலர் நாய்கள் மாநகராட்சி ஆய்வு

திண்டுக்கல்: சென்னை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரிலும் 'ராட்வீலர்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய்கள் வளர்க்கப்படுகிறதா என மாநகராட்சி நிர்வாகம் கால்நடை பராமரிப்பு துறையோடு இணைந்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.சென்னையில் சமீபத்தில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 2 ராட்வீலர் வகை நாய்கள் கடித்து குதறியது. இதனால் சிறுமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தமிழகத்தில் பேசும் பொருளானது. ஏற்கனவே ராட்வீலர் வகை நாய்களுக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் பலர் முறையான உரிமம் இல்லாமல் இந்த வகை நாய்களை வளர்க்கின்றனர். இதனால் பெரும் பிரச்னைகளும் அடிக்கடி ஏற்படுகிறது. தற்போது தமிழக அரசு 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது.சென்னை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் 'ராட்வீலர்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய்களை யாராவது வளர்க்கிறார்களா என மாநகராட்சி நிர்வாகம் கால்நடை பராமரிப்பு துறையோடு இணைந்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொது மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் போது வாய்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டும்.ஆக்ரோஷமான நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செல்லபிராணிகளிடம் அனுமதிக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ