உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்து சிறையில் உள்ள சரவணனை,3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்தது.திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4.66 கோடியை கையாடல் செய்தார். இந்தவிவகாரம் வெளியில் வர மாநகராட்சி நிர்வாகம் சரவணனை சஸ்பெண்ட் செய்தது .இவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர்.இதை விசாரித்த நீதிபதி பிரியா, நேற்றிலிருந்து (ஜூலை31) ஆக.2 வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்.அதன்படி போலீசாரும் சரவணனை அழைத்து சென்று விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை