மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்
22-Aug-2024
திண்டுக்கல் : சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் மாவட்ட பேரவை கூட்டம் திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கட்டடத்தில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமரம்மாள்,துணைத் தலைவர் சாலாட்சி பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் சக்திவேல்,மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பெருமாள், ராசுதமிழரசன் விமாலா காந்தா, மாநில செயலாளர் ரீட்டா பங்கேற்றனர்.மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 ஐ அகவிலைப் படியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும்.ஈமகிரிகை சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
22-Aug-2024