ஓன் போர்டு வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல், : திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் பழநி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஓன்போர்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 2, தகுதி சான்று இல்லாமல் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 1 வாகனம் என 3 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சோதனை தீவிரப்படுத்தப் படும் எனவும் தெரிவித்தார்.