உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடைகளில் வண்டுடன் தரமற்ற துவரம் பருப்பு சப்ளை

ரேஷன் கடைகளில் வண்டுடன் தரமற்ற துவரம் பருப்பு சப்ளை

வடமதுரை: வடமதுரை பகுதி ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்காக வினியோகம் செய்த துவரம் பருப்பு வண்டுகளுடன் தரமற்றதாக இருந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் ரேஷனில் துவரம் பருப்பு, பாமாலின் எண்ணெய் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு இப்பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. இந்நிலையில் இரு மாத இடைவெளியில் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு வடமதுரை பகுதி ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் பருப்பு தரமற்றதாக வண்டுகளுடன் இருந்தன. ஏராளமான பருப்புகள் வண்டுகள் துளையிடப்பட்டு காணப்பட்டன. உடைத்தால் உள்ளே இறந்த நிலையில் நுன்னிய வண்டு இருந்ததால் சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலர் குப்பையில் கொட்டாமல் மாடு வளர்ப்பவர்களுக்கு வழங்குகின்றனர். ரேஷன் ஊழியர்கள் கூறுகையில்,' ஒரு சில பருப்பு மூடைகள் வண்டுகளுடன் இருந்தன. தாலுகா வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை