குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வழிபாடு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவில் வீற்றிருக்கும் முருகனை வழிபட்டு சென்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின் அடுத்த முறை பாதயாத்திரை வரும்போது குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை வைத்து வழிபாடு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.