உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தனியார் பூங்கா பரமாரிப்பாளர் கவனியுங்க

தனியார் பூங்கா பரமாரிப்பாளர் கவனியுங்க

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடப்பது வழக்கம். இதில் கொடைக்கானல் தனியார் தோட்டங்களில் பராமரிக்கப்படும் பூங்காக்களில் சிறந்த பூங்காக்கள் தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இப்போட்டிக்கான விண்ணப்பபடிவங்கள் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா தோட்டக்கலை அலுவலர் அலுவலகத்தில் ஏப்.28 முதல் வழங்கபடுகிறது. பூங்கா உரிமையாளர்கள் பிரையன்ட் பூங்கா அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் மே 6 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் மே 12ல் உரிய கட்டணத்துடன் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் 97902-73216 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரிதேவி அறிக்கையில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை