உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாயம்மன் கோயில் பெரிய கும்பிடு விழா

தாயம்மன் கோயில் பெரிய கும்பிடு விழா

எரியோடு : எரியோடு மணியகாரன்பட்டியில் ஒக்கலிகர் பெல்லேரு குல தெய்வமான தாயம்மன் கோயில் உள்ளது. இதே வளாகத்தில் விநாயகர், வீருநாகம்மன், எரதம தாத்தப்பன், கிருஷ்ணர், முனியப்ப சுவாமி கோயில்களும் உள்ளன. ஜூன் 16ல் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தொடர்ச்சியாக 3 நாள் பெரிய கும்பிடு விழாவும் நடந்தது. கோயில் வீட்டில் இருந்து பூ, மா, பழக்கூடை அழைப்பு, தாயம்மனுக்கு பொம்மை பிடித்தல், ஈத்துகாணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், பிறந்த, புகுந்த வீட்டு பெண்களிடம் கும்பிடு வாங்கி பிரசாதம் வழங்குதல் என பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியாக சலகருது எனப்படும் சுவாமி மாடுகளின் ஓட்டப் பந்தயத்துடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை