உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது போதையில் மயங்கியவர் பலி விவரத்தை தேடும் போலீஸ்

மது போதையில் மயங்கியவர் பலி விவரத்தை தேடும் போலீஸ்

கொடைக்கானல்: சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நாள்தோறும் குடிமகன்கள் ரோட்டோரத்தில் ஆங்காங்கே மயங்கும் நிலையில் அடையாளம் தெரியாத நபர் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சமீபமாக இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தள்ளாடுகின்றனர். மதுவிற்கு எதிராக நீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதும் வருவாய் நோக்கில் செயல்படும் டாஸ்மாக்கால் இளைஞர்கள் சீரழிந்தும், ஏராளமான குடும்பங்கள் போதையால் பாதிக்க இளம் விதவைகள் அதிகரித்து வருகின்றனர்.இதற்கு தீர்வே இல்லாத நிலை கவலை அளிக்கிறது. உதாரணமாக சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகரில் போதை ஆசாமிகள் குடி நோய்க்கு அடிமையாகி ஆங்காங்கே ரோட்டில் மயங்கி கிடப்பது நாள்தோறும் அதிகரிக்கிறது. நேற்று அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 45 வயது கொண்ட ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் சோதித்த நிலையில் இறந்தது தெரியவந்தது.இறந்த நபர் குறித்து போலீசார் வலைதலங்களில் பதிவிட்டு விவரத்தை சேகரிக்கும் பணியை துவக்கிஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி