உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு தாராளம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு தாராளம்

கொடைக்கானல், : கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு ஜோராக நடப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் ஏராளமானோர் இங்கு நிலங்களை வாங்குகின்றனர். இங்கு முகாமிடும் அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்கின்றனர். நவீன கட்டுமானம், குடிநீர் தேவைக்கு இயந்திரம் பயன்பாடு அவசியம் என்ற நிலையில் நாள்தோறும் அனுமதியின்றி தடை செய்த இயந்திர பயன்பாடு நடக்கிறது. இதில் பாறை வெடி வைத்து தகர்க்க கம்ப்ரசர், ஜே.சி.பி., போர்வெல் என தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தாராளமாக பயன்படுத்தும் போக்கு நகரில் மட்டுமல்லாது மேல்மலை கிராமங்களிலும் ஜோராக நடக்கிறது. இத்தகைய செயலுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளார்கள். கனிமவளத்துறையினர் இங்கு நடக்கும் தடைசெய்த பணிகளை கண்டு கொள்ளாது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். தரைப்பகுதியில் உள்ள போலீஸ், வனத்துறை சோதனை சாவடிகளை தாண்டி போர்வெல்,ஜே.சி.பி. உள்ளிட்ட இயந்திரங்கள் வருகின்றன. இருந்த போதும் இதன் மீது வனத்துறையோ, வருவாய்துறை, போலீஸ் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. இது போன்ற தடை இயந்திர பயன்பாட்டை தடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தொடரும் இதுபோன்ற நிலை கனமழை பெய்யும் நிலையில் நிலச்சரிவு பேராபத்தை கொடைக்கானல் சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. சிவராம், ஆர்.டி.ஒ., கொடைக்கானல்: கொடைக்கானலில் சில மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட போர்வெல் பயன்படுத்தப்பட்டதற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இதுபோன்ற வாகனம் வந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கையை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை