| ADDED : மே 29, 2024 05:20 AM
சின்னாளபட்டி : பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் விழாவிற்காக குடகனாற்றில் இருந்து பக்தர்களின் தீர்த்தம் குட ஊர்வலம் நடந்தது.பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 27ல் பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நடந்தது. இதையொட்டி பிள்ளையார்நத்தத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக குடகனாறு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீர்த்தம், பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், பால் அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நிர்வாக குழுவினர் உலகநாதன், முருகேசன், கிரஷர் பாலு, ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் உலகநாதன் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.