உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

சின்னாளபட்டி: கீழக்கோட்டை அருந்ததியர் காலனியில் சக்திகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு புதிதாக பாலவிநாயகர், பாலமுருகன் சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக, காப்பு கட்டிய பக்தர்கள் ராமேஸ்வரம், பழநி, திருப்பதி, கொடுமுடி, மதுரை, வீரபாண்டி, சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். சின்னாளபட்டி பிருந்தாவன தோப்பு ராமஅழகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சிலைகள் பிரதிஷ்டையை தொடர்ந்து மகா கணபதி ஹோமம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை