வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்ப எந்த ஆர்வலரும் அரசிகளும் அரசும் கண்டுக்க மாட்டானுக வில ஏறுனா .குதிக்கறகு தி
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் விலை வீழ்ச்சியால் ரோட்டோரங்களில் குப்பையாக கழிவு தக்காளி கிலோ கணக்கில் வீசப்படுகிறது. தக்காளி விவசாயத்தில்முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, நல்ல லாபம் தரக்கூடியது என்பதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் பயிரிடுகின்றனர். சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமானதால் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்தது.சராசரியாக ரூ.400க்கு விற்கப்படும் 15 கிலோ எடை கொண்ட வீரிய ரக பெட்டிக்கு ரூ.170, ரூ.300க்கு விற்கப்படும் நாட்டு ரகத்திற்கு ரூ.80 வரை மட்டுமே தற்போது விலை கிடைக்கிறது. நாட்டுத் தக்காளி ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்காமல் அழுகிடும் என்பதால் அதன் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. அய்யலுார் கமிஷன் மண்டிகளுக்கு தற்போது வரத்து அதிகமாகி, விலை வெகுவாக குறைந்ததால் அதிகளவில் சுமாரான பழங்களை கழிவாக மாற்றி அகற்றுகின்றனர். விலை உச்ச நேரத்தில் கழிவு பழங்களாக மாற்றப்படுவது மிக சொற்பமாக இருக்கும். 5 ரூபாய் நாணய அளவில் இருக்கும் பழம் கூட தெருக்களில் கூறுக்கட்டி விற்பர். உடைந்த பழங்கள் ஓட்டல்களுக்கு சென்றுவிடும். தற்போது கமிஷன் மண்டிகளில் ஏற்படும் அதிகளவு கழிவு பழங்கள், சரக்கு வேன் வியாபாரிகளால் விற்க முடியாமல் வீணாகும் பழங்கள் திண்டுக்கல் -திருச்சி ரோட்டோரத்தில்இரவு நேரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இப்ப எந்த ஆர்வலரும் அரசிகளும் அரசும் கண்டுக்க மாட்டானுக வில ஏறுனா .குதிக்கறகு தி