மேலும் செய்திகள்
குன்றத்துாரில் 13 மாடுகள் பறிமுதல்
10-Aug-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க திருச்சியிலிருந்து குழுவை வரவழைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.திண்டுக்கல் நகரில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் வாகனஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மாடுகள் ஒன்றோடொன்று மோதி சண்டையும் போடுகின்றன. மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்குகோரிக்கை விடுக்கப்படுகிறது. இதை முற்றிலும் கட்டுப்படுத்த திண்டுக்கல் மாநகராட்சியில் சுகாதார பிரிவு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது, யார் சொன்னாலும் பிடிபட்ட மாடுகளை திரும்ப அனுப்ப கூடாது. மாடுகளை பிடிப்பதற்காக திருச்சியிலிருந்து தனி குழுவை வரவழைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
10-Aug-2024