உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

திண்டுக்கல்:விபத்து வழக்கு விசாரணையில் ஆஜராகாத திருப்பூர் மாவட்டம் நல்லுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜு 50. 2020ல் திண்டுக்கல் -கரூர் ரோட்டில் நடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற வேன் மோதி இறந்தார். இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.விபத்து நடந்த போது திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் ஓராண்டாக இவ்வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார். பாலமுருகன் தற்போது நல்லுாரில் பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை